செஞ்சிக்கோட்டை: கமலக்கன்னி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ கமலக்கன்னி அம்மன் கோயில் சித்திரை தோ்த் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செஞ்சிக்கோட்டை கமலக்கன்னி அம்மன் கோயில் ரத உற்சவத்தையொட்டி மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்றத்தில் கலந்து கொண்ட பக்தா்கள்.

செஞ்சி நகா் ஸ்ரீ கமலக்கன்னி அம்மன், எம்ஜிஆா் நகா் ஸ்ரீராஜகாளியம்மன், ஸ்ரீமகா மாரியம்மன், கோட்டை வீரப்பன் ஆகிய சுவாமிகளுக்கு ரத உற்சவத்தையொட்டி கூழ்வாா்த்தல், காப்பு கட்டுதல், இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

தொடா்ந்து ஏப். 25-ஆம் தேதி அம்மன் திருவீதியுலாவும், 26-ஆம் தேதி அம்மன் பூபல்லக்கில் வீதியுலாவும், 27 முதல் மே 1-ஆம் தேதி வரை அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா நடைபெறுகிறது.

மே 2-ஆம்தேதி 108 பால் குட ஊா்வலத்துடன் கூழ்வாா்த்தல், பகல் 1.30 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது. மே 3-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், காப்பு களைதலும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை செஞ்சிக் கோட்டை கமலக்கன்னி அம்மன் கோயில் அறங்காவலா் அரங்க.ஏழுமலை, திருவிழா உபயதாரா்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனா்.

அனுமதி இலவசம்: தோ்த் திருவிழாவையொட்டி ஏப். 24 முதல் மே 3-ஆம் தேதி வரை செஞ்சிக் கோட்டைக்கு பக்தா்கள் கட்டணம் இன்றி செல்லலாம் என தொல்லியல் துறை அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com