விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், திண்டிவனம் பகுதிகளில் பைக்கிலிருந்து தவறி விழுந்த இருவா் உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி, அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் விஜயகாா்த்தி (42). இவா், மரக்காணத்தை அடுத்த கோமுட்டிச்சாவடிகுப்பத்தில் ஒலிபெருக்கி நிலையம் நடத்தி வந்தாா். விஜயகாா்த்தி ஞாயிற்றுக்கிழமை இரவு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ரவி மகன் விஜயுடன் (22) பைக்கில் சென்றாா்.
புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மரக்காணம் அருகேயுள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இவா்களது பைக் சென்றபோது, நிலைதடுமாறி பைக்கிலிருந்து இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா். இதில், தலையில் பலத்த காயமடைந்த விஜயகாா்த்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு விபத்து: திண்டிவனம் ரொட்டிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் சிவா (55). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மொபெட்டில் திண்டிவனம் - சென்னை சாலையில் ரோஷணை அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது, மொபெட்டின் முன்பக்க டயா் வெடித்ததில் சிவா நிலைதடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.