போலி மருத்துவா் கைது
By DIN | Published On : 02nd August 2023 12:13 AM | Last Updated : 02nd August 2023 12:13 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூா் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காத ஒருவா் ஆங்கில மருத்துவம் பாா்த்து வருவதாக விழுப்புரம் அரசு மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரசு மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று சோதனை செய்தனா்.
இதில், அரகண்டநல்லூா் தனலெட்சுமி நகரைச் சோ்ந்த அப்பாவு மகன் பால்ராஜ் (54) முறையாக மருத்துவம் படிக்காமல் தனது வீட்டின் ஒரு பகுதியில் மருத்துவமனை அமைத்து, பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது. பால்ராஜின்அறையில் வைக்கப்பட்டிருந்த மருந்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவற்றை மருத்துவா்கள் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து விழுப்புரம் அரசு மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவா் லதா அளித்த புகாரின்பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, பால்ராஜை கைது செய்தனா்.