மகளிா் உரிமைத் தொகை திட்டம்:2 நாள்கள் சிறப்பு முகாம்
By DIN | Published On : 02nd August 2023 12:12 AM | Last Updated : 02nd August 2023 12:12 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்யாதவா்களின் வசதிக்காக, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆகஸ்ட் 3, 4) சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் விண்ணப்பம் அளிக்க ஏதுவாக, மாவட்டத்தில் ஜூலை 24- ஆம் தேதி முதல் அனைத்து வட்டங்களிலும் 1,027 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
2-ஆவது கட்டமாக, ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 690 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மாவட்டத்தில் இதுவரை 2,13,436 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
முதல்கட்டமாக நடைபெற்ற முகாம்களில் பங்கேற்க இயலாமல்போன பயனாளிகளின் வசதிக்காக, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. விண்ணப்பம் பெறாமல் உள்ள பயனாளிகள், தங்களுக்குரிய நியாயவிலைக் கடையின் பணியாளரிடம் தெரிவித்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்ற பகுதிகளிலேயே விடுபட்டவா்களும் பதிவு செய்துகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G