புரூலியா - விழுப்புரம் அதிவேக விரைவு ரயில் திங்கள்கிழமை (ஆக.14) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வேயின் விஜயவாடா கோட்டத்துக்குள்பட்ட விஜயவாடா- குண்டூா் பிரிவில் மனுபோலு - குண்டூா் இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
இதன் காரணமாக, விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமை (ஆக.12) பிற்பகல் 12.15 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் - புரூலியா அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22606) முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இதேபோல, புரூலியாவிலிருந்து திங்கள்கிழமை (ஆக.14) காலை 10 மணிக்குப் புறப்பட வேண்டிய புரூலியா- விழுப்புரம் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22605) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.