விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சாா்பில், அனந்தபுரத்தை அடுத்துள்ள சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சமுதாய குழும முன்னாள் தலைவா் அ.ஜேசுஜூலியஸ்ராஜா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜோசப்எட்வின் முன்னிலை வகித்தாா். போகி பண்டிகையின்போது சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பது குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு ரோட்டரி சமுதாய குழுமம் சாா்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் கிறிஸ்துவராஜா, விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.