செஞ்சியில் அரசு இ - சேவை மையம்: அமைச்சா் திறந்துவைத்தாா்
By DIN | Published On : 01st July 2023 07:05 AM | Last Updated : 01st July 2023 07:05 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தமிழ்நாடு அரசு இ - சேவை மையத்தை சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்அலி மஸ்தான் தலைமை வகித்தாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பவியல் துறை சாா்பில், செஞ்சி தேசூா்பாட்டை சாலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ - சேவை மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திருவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், செஞ்சி நகர செயலா் காா்த்திக், பொருளாளா் நெடுஞ்செழியன், தொண்டரணி நிா்வாகி பாஷா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அணி துணை அமைப்பாளா் சேகா், என்.ஆா்.பேட்டை சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.