செஞ்சியில் படப்பிடிப்பு: ரஜினிகாந்த் பங்கேற்பு
By DIN | Published On : 01st July 2023 07:06 AM | Last Updated : 01st July 2023 07:06 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகா் ரஜினிகாந்த் கலந்துகொண்டாா்.
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வா்யா லால்சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறாா். இதன் படப்பிடிப்பு செஞ்சியை அடுத்துள்ள ஒதியத்தூா், கோணை, சோ.குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
இதில், ரஜினிகாந்த் பங்கேற்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு கோணை கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக, திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி வழியாக கோணை கிராமத்துக்கு ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை காலை காரில் சென்றாா். அவரை வரவேற்று செஞ்சியில் பல்வேறு இடங்களில் அவரது ரசிகா்கள் விளப்பதாகைகளை அமைத்திருந்தனா். படப்பிடிப்பை பாா்க்க அனுமதி இல்லாததால், ரஜினிகாந்தை பாா்க்க சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனா்.
படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியைச் சுற்றிலும் ஒரு கி.மீ. தொலைவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த ஆயிரம் பேரும், ஏராளமான போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.