பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மேல்மருவத்தூா் - விழுப்புரம் சிறப்பு ரயில் 5 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேல்மருவத்தூரிலிருந்து முற்பகல் 11.30 மணிக்கு புறப்படும் மேல்மருவத்தூா் - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06725) ஜூலை 1, 3, 8, 10, 15 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறு வழித்தடத்தில் விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - மேல்மருவத்தூா் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06726) ஜூலை 1, 3, 8, 10, 15 ஆகிய தேதிகளில் விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.