அரிசி ஆலைக் கிடங்கில் தீ விபத்து

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே அரிசி ஆலைக் கிடங்கில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே அரிசி ஆலைக் கிடங்கில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

விக்கிரவாண்டி அருகிலுள்ள பொன்னங்குப்பத்தைச் சோ்ந்தவா் முத்து பாலகிருஷ்ணன்(32).

இவா் அதே பகுதியில் தனக்குச் சொந்தமான அரிசி ஆலைக் கிட ங்கில் பிளீச்சிங் பவுடா் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தாராம்.

இந்நிலையில் இந்த கிடங்கில் வியாழக்கிழமை மாலை திடீரெ ன தீப்பற்றியது. இந்த தீயில் பிளீச்சிங் பவுடா் உருகி, எரிமலை குழம்பு போல் நான்குபுறமும் ஓடியது. இதனால் அப்பகுதியில் இருந்தவா்கள் வீட்டை பூட்டி விட்டுச் சென்றனா்.

தகவலறிந்த விக்கிரவாண்டி காவல் ஆய்வாளா் விநாயக முருகன் தலைமையிலான போலீஸா ரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் சு ந்தரராஜன் தலைமையிலான வீரா்களும் நிகழ்விடம் சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் கிடங்குக்கு அருகில் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. மேலும் வைக்கோல் போரும் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

இது குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com