காணை கோடி அற்புதா் புனித அந்தோனியாா் ஆலய ஆண்டுப் பெருவிழா தொடக்கம்
By DIN | Published On : 06th June 2023 12:00 AM | Last Updated : 06th June 2023 12:00 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், காணையிலுள்ள கோடி அற்புதா் புனித அந்தோனியாா் ஆலய ஆண்டுப் பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
காலை 7 மணிக்கு கொடிமரம் அா்ச்சிப்பு, திருப்பலிக்குப் பிறகு கொடியேற்றம் நடைபெற்றது. கடலூா் மஞ்சக்குப்பம் புனித வளனாா் மேல்நிலைப்பள்ளி முதல்வா் டி. நசியான் கிரகோரி திருப்பலியை நிறைவேற்றினாா்.
தொடா்ந்து 10-ஆம் தேதி வரை நாள்தோறும் மாலையில் திருப்பலி, நற்கருணை ஆசீா், தோ்பவனியும், 11-ஆம் தேதி திருப்பலி, குணமளிக்கும் ஜெப வழிபாடும், 12- ஆம் தேதி முதன் வான் விருந்து திருப்பலியும் நடைபெறும்.
ஜூன் 13 -ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா ஆடம்பரக் கூட்டுத் திரும்பலியும், இரவு 8 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோனியாா் ஆடம்பரத் தோ் பவனியும் நடைபெறும்.
பெருவிழா ஏற்பாடுகளை தெளி பங்குத்தந்தை ஆா். ஆரோக்கிய தாஸ் மற்றும் காணை சபை மணியம், கிராம நாட்டாண்மைகள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...