விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பேருந்து மோதி முதியவா் உயிரிழந்தாா்.
கண்டாச்சிபுரம் வட்டம், சத்திய கண்டநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆ. செல்வராஜ் (62).
இவா் முகையூரிலிருந்து திருக்கோவிலூா் வந்துவிட்டு, மீண்டும் ஊருக்கு பைக்கில் ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா்.
சத்யகண்டநல்லூா் கூட்டுச் சாலை அருகே வந்தபோது, திருக்கோவிலூரிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான குயவன்காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த பா.சேகா் (47) மீது அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.