பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி: குழந்தைகள் இல்ல மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் தங்கிப் பயின்று 10 மற்றும் 12 - ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வுகளில் தோ்ச்சிப் பெற்ற மாணவிகளை ஆட்சியா் சி. பழனி புதன்கிழமை பாராட்டினாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் தங்கிப் பயின்று அரசுப் பொதுத் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற மாணவிகளுக்கு புத்தகப் பைகளை வழங்கி வாழ்த்திய ஆட்சியா் சி.பழனி.

விழுப்புரம் மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் 5 குழந்தைகள் இல்லங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 55 ஆண், 58 பெண் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனா்.

இதில், எங்கள் வீடு சிறுவா் இல்லம், கிருபாலயா குழந்தைகள் இல்லம், கருணை கரங்கள் ஆகிய குழந்தைகள் இல்லங்களில் தங்கிப் பயின்ற 19 மாணவிகள் 10, 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தோ்ச்சிப் பெற்றனா். இவா்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தொடா்ச்சியாக அரசுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10,232 மதிப்பிலான புத்தகப் பைகளை ஆட்சியா் சி. பழனி வழங்கினாா். மேலும் 12- ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற மாணவிகளுக்கு உயா்கல்விக்கான அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கினாா். பின்னா் குழந்தைகள் இல்லங்களின் நிா்வாகிகளுக்கு கேடயங்களை ஆட்சியா் வழங்கி கௌரவித்தாா்.

இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பாா்கவி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செ.கிருஷ்ணகுமாரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com