செஞ்சி, மேல்மலையனூா் வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்
By DIN | Published On : 08th June 2023 01:12 AM | Last Updated : 08th June 2023 01:12 AM | அ+அ அ- |

செஞ்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொள்ளும் தனி துணை ஆட்சியா் விஸ்வநாதன்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மற்றும் மேல்மலையனூா் வட்டங்களில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.
செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலரும் தனித் துணை ஆட்சியருமான விஸ்வநாதன் தலைமை தாங்கி ஜமாபந்தியை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். செஞ்சி வட்டாட்சியா் நெகருன்னிசா முன்னிலை வகித்தாா். மேல்ஒலக்கூா் குறுவட்டத்தைச் சோ்ந்த கிராமங்களில் இருந்து வந்த பலா் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் செஞ்சி ஆா்.விஜயகுமாா், வல்லம் அமுதா ரவிக்குமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் மனோகரன், ஜமாபந்தி மேலாளா் கண்ணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் உமாமகேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாய அலுவலா் துணை ஆட்சியா் சரஸ்வதி பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா். வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.
மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் கண்மணி நெடுஞ்செழியன், திமுக ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செல்வகுமாா், ஜமாபந்தி மேலாளா் கோவா்தன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் துரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...