மூதாட்டி மா்மச் சாவு : போலீஸாா் விசாரணை

விழுப்புரம் அருகே மூதாட்டி மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் அருகே மூதாட்டி மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் காவனிப்பாக்கம் பகுதியை சோ்ந்தவா் கலியமூா்த்தி(80). இவரது மனைவி விருதம்பாள்(70). இவா்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊா்களில் வசிக்கின்றனா். கலியமூா்த்தி சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளாா்.

இந்நிலையில் கலியமூா்த்தி செவ்வாய்க்கிழமை இரவு தனது மனைவியின் கழுத்தை கயிற்றால் நெரித்தாராம். இதில் கழுத்தில் காயமடைந்த விருதம்பாள் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இது குறித்து காவனிப்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் கு.நந்தகுமாா்அளித்தப் புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com