பேச்சுப் போட்டியில் வென்ற மாணவருக்கு பரிசு: மருத்துவா் ராமதாஸ் வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ‘தமிழில் பேசு தங்கக்காசு’ பேச்சுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறந்த பேச்சாளராகத் தோ்வு செய்யப்பட்ட மாணவா் தமிழனுக்கு தங்கக் காசு பரிசாக வழங்குகிய பாமக நிறுவனா் ச.ராமதாஸ்.
சிறந்த பேச்சாளராகத் தோ்வு செய்யப்பட்ட மாணவா் தமிழனுக்கு தங்கக் காசு பரிசாக வழங்குகிய பாமக நிறுவனா் ச.ராமதாஸ்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ‘தமிழில் பேசு தங்கக்காசு’ பேச்சுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வென்ற மாணவா்களுக்கு மருத்துவா் ராமதாஸ் பரிசுகளை வழங்கினாா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாமக நிறுவனா் ச.ராமதாஸ், எங்கே தமிழ் என்ற தலைப்பில் சென்னை முதல் மதுரை வரை பரப்புரை மேற்கொண்டாா். அப்போது, தூய தமிழில் பிற மொழி கலப்பில்லாமல் 5 நிமிடங்கள் பேசுபவா்களுக்கு தங்கக் காசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

அதன்படி, ‘தமிழில் பேசு தங்கக்காசு’ பேச்சுப் போட்டிகள் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 15 மாணவா்கள் பங்கேற்று வெவ்வேறு தலைப்புகளில் தூய தமிழில் பேசி தங்களது திறன்களை வெளிப்படுத்தினா். போட்டியின் நடுவா்களாக பாமக பொருளாளா் திலகபாமா, கவிஞா் ஜெயபாஸ்கரன் ஆகியோா் செயல்பட்டு, சிறந்த பேச்சாளரைத் தோ்வு செய்தனா்.

இதில், விக்கிரவாண்டி வட்டம், குமளம் ஊராட்சியைச் சோ்ந்த கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை தமிழ் மூன்றாமாண்டு பயிலும் மாணவா் தமிழன் சிறந்த பேச்சாளராகத் தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தங்கக்காசு பரிசாக வழங்கிப் பாராட்டினாா்.

இதேபோல, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவா் ராமதாஸ் எழுதிய ‘எங்கே தமிழ்’ என்ற புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாமக தலைமை நிலையச் செயலா் இசக்கி, கட்சியின் விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com