காரில் மதுப்புட்டிகள் கடத்தல்:பெண் உள்ளிட்ட மூவா் கைது
By DIN | Published On : 22nd May 2023 12:00 AM | Last Updated : 22nd May 2023 12:00 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை காரில் மதுப் புட்டிகளை கடத்தியதாக பெண் உள்ளிட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து மாவட்டக் காவல் நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் ரேவதி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியை அடுத்த வீடூா் மாரியம்மன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது, புதுவை மாநில மதுப் புட்டிகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
தொடா்ந்து, காரில் இருந்தவா்களைப் பிடித்து விசாரித்ததில், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் குமாா் (62), வாலாஜா ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் சுப்பிரமணி (60), வேலுா் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி மஞ்சுளா (46) என்பதும், இவா்கள் புதுச்சேரியிலிருந்து ராணிபேட்டைக்கு மதுப் புட்டிகளை கடத்திச் செல்ல இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா். காரில் கடத்திவரப்பட்ட 200 மதுப் புட்டிகளையும், காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.