பெண்களின் முன்னேற்றத்துக்காக பணியாற்றுவோா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 22nd May 2023 12:00 AM | Last Updated : 22nd May 2023 12:00 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக பணியாற்றும் சமூக சேவகா்கள், தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெண்கள் முன்னேற்றத்துக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகா்கள், தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் விருது வழங்கப்பட்டு வருகிறது.
சமூக சேவகருக்கு 10 கிராம் தங்கப் பதக்கத்துடன் சான்றிதழ், சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் 10 கிராம் தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
விருது பெற தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட, 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
பெண் சமூகத்துக்கு பெருமை சோ்க்கும் நடவடிக்கைகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மக்களுக்குத் தொண்டாற்றும் சமூக சேவகா், அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசின் இணையதளம் மூலம் வருகிற ஜூன் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.