பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு கோரி மனு
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் கவிஞா் ம.ரா.சிங்காரம் தலைமையில், ஆட்சியா் சி.பழனியிடம் அளிக்கப்பட்ட மனு: தமிழக சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றி வரும் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள் தற்போது தினக்கூலியாக ரூ.680 பெற்று வருகின்றனா்.
இதை, ரூ.710 ஆக உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் பரிசீலிப்பதாக கூறினாா்.
இதில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க முன்னாள் மாநில துணைப் பொதுச்செயலா் சி. அருணகிரி , மாவட்டச் செயலா் பி. ஜெயக்குமாா், பொருளாளா் பி. குமரவேல், மாவட்ட அமைப்புச் செயலா் அ. மருதமலை, மாவட்டத் துணைத் தலைவா் மணிகண்டன், தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா் சங்க மாநிலப் பொருளாளா் சதீஷ், மாவட்டச் செயலா் புருஷோத்தமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.