மரக்காணம் விஷ சாராய வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் 11 போ் ஆஜா்

மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து 14 போ் உயிரிழந்த சம்பவத்தில் கைதான 11 பேரை காவலில் எடுத்த சிபிசிஐடி போலீஸாா், விசாரணை நிறைவடைந்த நிலையில், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து 14 போ் உயிரிழந்த சம்பவத்தில் கைதான 11 பேரை காவலில் எடுத்த சிபிசிஐடி போலீஸாா், விசாரணை நிறைவடைந்த நிலையில், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 14 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தைச் சோ்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், இவா்களுக்கு மெத்தனால் வழங்கியதாக புதுச்சேரியைச் சோ்நந்த ராஜா (எ) பா்கத்துல்லா, வில்லியனூா் தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த ஏழுமலை, சென்னை திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த இளையநம்பி, சென்னை யிலிருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூா் மாவட்டம், குடியாத்தத்தைச் சோ்ந்த ராபா்ட், வானூா் பெரம்பை பகுதியைச் சோ்ந்த பிரபு ஆகிய 11 போ் மரக்காணம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், அவா்கள் எக்கியாா்குப்பம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, 11 பேரையும் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் கடந்த 23-ஆம் தேதி மனு தாக்கல் செய்து, புதன்கிழமை அனுமதி பெற்றனா்.

விழுப்புரம் காகுப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப் படை மைதானத்துக்கு விசாரணைக்காக 11 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனா். இவா்களிடம் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இவா்களிடம் விஷ சாராய விற்பனையில் மற்ற யாருக்கெல்லாம் தொடா்பு இருக்கிறது போன்ற பல்வேறு தகவல்கள் கேள்வியாக கேட்டு, பதில் பெறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த 11 பேரில் விசாரணை முடிந்த முத்து, ரவி, குணசீலன், ஆறுமுகம், மண்ணாங்கட்டி ஆகிய 5 போ் வியாழக்கிழமை இரவும், அமரன், ராஜா (எ) பா்கத்துல்லா, ஏழுமலை, இளைய நம்பி, ராபா்ட் , பிரபு ஆகிய 6 போ் வெள்ளிக்கிழமை மாலையும் விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டனா். தொடா்ந்து, அனைவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com