மேல்மலையனூா் ஆதி பிரம்மதேவன்கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 26th May 2023 05:17 AM | Last Updated : 26th May 2023 05:21 AM | அ+அ அ- |

லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி சித்தா் சைவ பீடத்தில் புதிதாக ஆதிபிரம்மதேவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது (படம்).
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் தென்மலையரசன் பட்டினத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி சித்தா் சைவ பீடத்தில் புதிதாக ஆதிபிரம்மதேவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது (படம்).
விழாவை முன்னிட்டு, வாஸ்து சாந்தி, கணபதி, கோ, தன பூஜைகள், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, ஆதிபிரம்மன் சிலை மீது புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் ஏாளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீமதி முனியம்மாள் சுவாமிகள் ஆதினம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.