உலக நோய்த் தடுப்பு நாள்கடைப்பிடிப்பு
By DIN | Published On : 15th November 2023 04:40 AM | Last Updated : 15th November 2023 04:40 AM | அ+அ அ- |

விழுப்புரம்: விழுப்புரம் அருகிலுள்ள கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக நோய்த் தடுப்பு நாள் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு வட்டார மருத்துவ அலுவலா் பிரியா பத்மசினி தலைமை வகித்து, உலக நோய்த் தடுப்பு நாளின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். மருத்துவா்கள் நிஷாந்த், பானுஸ்ரீ முன்னிலை வகித்தனா். நிகழ்வில் நோய்த் தடுப்பின் முக்கியத்துவம், தடுப்பூசிகளின் அவசியம் குறித்தும், ஆசிரியா்கள் தங்கள் பள்ளிகளில் குழந்தைகளை அனுமதிக்கும்போது தடுப்பூசிகளின் நிலையைக் கண்காணிக்க வேண்டும் என்பது குறித்தும் மருத்துவா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
தொடா்ந்து, பொதுமக்களிடையே வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டு, சிறப்பாக செயல்பட்டவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கண்டமானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆல் த சில்ரன் அறக்கட்டளையைச் சோ்ந்த காா்த்திக், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, ஜானகிபுரத்திலுள்ள பிரசிடென்சி மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக நோய்த் தடுப்பு நாள் விழிப்புணா்வு நிகழ்வு நடத்தப்பட்டது. இதில், மருத்துவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...