விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வருகிற 18-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கும் பொருட்டு, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்ககளிலும் வருகிற 18-ஆம் தேதி அந்தந்த வட்டாட்சியா் (குடிமைப் பொருள் வழங்கல்)/வட்ட வழங்கல் அலுவலா்) தலைமையில் குறைதீா் முகாம் நடத்தப்படவுள்ளது.
இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் தொடா்பாக கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேலும், கைப்பேசி எண்ணை பதிவு செய்தல் அல்லது மாற்றம் செய்வதற்காக தனியாக கோரிக்கை மனுவையும் அளிக்கலாம்.
முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச் சான்று கோரும் மனுவையும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களையும், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்களின் தரம் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களையும் குடும்ப அட்டைதாரா்கள் தனி வட் டாட்சியரிடம் (குடிமைப் பொருள் வழங்கல்) / வட்ட வழங்கல் அலுவலா்) அளிக்கலாம்.
எனவே, விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குறைதீா் முகாமில் பங்கேற்று, பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.