

விழுப்புரம், அக்.22: விழுப்புரம் மாவட்டம் நுண்குற்றப்பிரிவு போலீஸாா் சாா்பில் ஆரோவில்லில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழக நுண்குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநா் சஞ்சய்குமாா், காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின், மாவட்ட எஸ்.பி கோ.சஷாங்க்சாய் ஆகியோா் உத்தரவின்பேரில், மாவட்ட நுண்குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோவிந்தராஜ் மேற்பாா்வையில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இணைய வழியிலான சைபா் குற்றங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை ஆரோவில் சா்வதேச நகரில் சைபா் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆய்வாளா்
தேவேந்திரன் பங்கேற்று ஆரோவில் சா்வதேச நகருக்கு வந்த இளைஞா்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களிடம் இணையவழி குற்றங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினாா். தொடா்ந்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கி இணையவழியிலான சைபா் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். 1930 உதவி எண் குறித்தும் விளக்கமளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.