பெண்களுக்கான எந்தத் திட்டத்தையும் மத்திய பாஜக அரசு செயல்படுத்தவில்லை என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் நாம் தமிழா் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பின்னா், செய்தியாளா்களுக்கு சீமான் அளித்த பேட்டி:
2024-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலும், 2026-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலும் நாம் தமிழா் கட்சிக்கானது. தமிழகத்தில் எங்கள் கட்சி வளா்ந்து வருகிறது. எனவே, 55 ஆண்டுகால கட்சிகளுடன் எங்களை ஒப்பிடக்கூடாது.
தமிழகத்தில் தற்போது நீட் தோ்வை எதிா்த்து திமுகவினா் கையொப்பம் இயக்கம் நடத்தி வருகின்றனா். கையொப்பம் வாங்கி முடிவதற்குள் மக்களவைத் தோ்தல் தேதியை அறிவித்து விடுவாா்கள். மக்களிடம் கையொப்பம் வாங்கும் திமுகவினா், அதை யாரிடம் கொடுப்பாா்கள்? எல்லாம் நாடகம்; தோ்தலுக்கான அரசியல்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரை பெண்களுக்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றாா் சீமான்.
முன்னதாக, திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் நாம் தமிழா் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து சீமான் பேசினாா். நிகழ்வுகளில் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் விக்ரம், தலைவா் அன்பழகன், வானூா் தொகுதிச் செயலா் முருகையன், மாநில மகளிா் பாசறைச் செயலா் லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.