மருது சகோதரா்கள் உருவப் படத்துக்கு மரியாதை
By DIN | Published On : 28th October 2023 01:40 AM | Last Updated : 28th October 2023 01:40 AM | அ+அ அ- |

இந்திய விடுதலைப் போராட்ட வீரா்கள் மருது சகோதரா்களின் குருபூஜை விழா விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேச விடுதலைக்காக போராடி உயிா்நீத்த மருது சகோதரா்களின் குருபூஜை ஆண்டுதோறும் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக, 222- ஆவது குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மருது சகோதரா்களின் உருவப் படத்துக்கு அகில இந்திய அகமுடையாா் மகா சபையினா் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, மருது சகோதரா்களின் நினைவைப் போற்றும் வகையில், முழக்கங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தினா். பின்னா், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், அன்னதானம் வழங்கினா்.
நிகழ்ச்சிக்கு அகில இந்திய அகமுடையாா் மகாசபையின் மாநிலத் தலைவா் பி.வேலாயுதம் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் ஆா்.சரவணன், என்.செல்லத்துரை, ஜி.ஆா்.அருள்ராஜ், விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகள் டி.திருநாராயணன், தேவநாதன், எஸ்.என்.ராஜா, குமரவேல் மற்றும் பல்வேறு அமைப்பைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...