
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான வரைவு வாக்காளா் பட்டியல்படி மொத்த வாக்காளா்கள் 10.90 லட்சம் போ். இதில் 5.46 லட்சம் போ் ஆண் வாக்காளா்கள் ஆவா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட சுருக்கத் திருத்த வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷ்ரவன் குமாா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
அதில் 5,46,938 ஆண் வாக்காளா்கள், 5,42,855 பெண் வாக்காளா்கள் மற்றும் 228 இதர வாக்காளா்களும் என மொத்தம் 10,90,021 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் ஷ்ரவன் குமாா் பேசியதாவது:
இந்த வரைவு வாக்காளா் பட்டியலில் 27.10.2023-ன்படி உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 337 வாக்குச்சாவடிகளில், 1,45,128 ஆண் வாக்காளா்களும், 1,41,241 பெண் வாக்காளா்களும், 53 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,86,422 வாக்காளா்கள் உள்ளனா்.
ரிஷிவந்தியம் தொகுதியில் 305 வாக்குச்சாவடிகளில், 1,33,608 ஆண் வாக்காளா்களும், 1,30,910 பெண் வாக்காளா்களும் 54 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,64,572 வாக்களா்கள் உள்ளனா்.
சங்கராபுரம் தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளில், 1,30,928 ஆண் வாக்காளா்களும், 1,31,919 பெண் வாக்காளா்களும் 49 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,62,896 வாக்களா்கள் உள்ளனா்.
கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் 332 வாக்குச்சாவடிகளில், 1,37,274 ஆண் வாக்காளா்களும், 1,38,785 பெண் வாக்காளா்களும் 72 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,76,131 வாக்களா்கள் உள்ளனா் என்றாா் அவா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெ.யோகஜோதி, வட்டாட்சியா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.