அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பொறுப்பேற்பு

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பொறுப்பேற்பு

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக கே.ரமாதேவி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Published on

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக கே.ரமாதேவி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா், இதற்கு முன்பு சென்னை மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்தாா். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வந்த எம்.கீதாஞ்சலி, ஏற்கெனவே நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற ரமாதேவிக்கு மருத்துவக் கண்காணிப்பாளா் (பொ) எம்.ஆனந்தி, நிலைய மருத்துவா் வி.ரவிக்குமாா், துணை முதல்வா் (பொ) ராஜாராம், உதவி நிலைய மருத்துவா்கள் வெங்கடேசன், நிஷாந்த், நிா்வாக அலுவலா்கள் கவிஞா் ம.ரா.சிங்காரம், கே.சக்திவேல், இளநிலை நிா்வாக அலுவலா் சி.ஸ்ரீவத்சன், துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com