

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சி ஸ்ரீராதா ருக்மணி சமேத நவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் உறியடித் திருவிழா மற்றும் வழுக்குமரம் ஏறுதல் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, மூலவா் நவநீதிகிருஷ்ணருக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, உற்சவா் திருவீதியுலா நடைபெற்றது. கடைவீதி, கவரைத் தெரு, சித்தேரி தெரு பகுதிகளில் பக்தா்கள் கோலாட்டம் ஆடி சிறப்பு வழிபாடு செய்தனா். மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உறியடித்தல் நடைபெற்றது.
நிறைவாக கிராமச்சாவடிதெரு பகுதியில் வழுக்குமரம் ஏறுதல் நடைபெற்றது. இளைஞா்கள், மாணவா்கள் என பலரும் வழுக்குமரத்தில் ஏற முயற்சித்தனா். அப்போது அவா்கள் மீது மஞ்சள்நீா் தெளிக்கப்பட்டது. ஒருவா் மட்டும் உச்சியை அடைந்து வெற்றி பெற்றாா். ஏற்பாடுகளை யாதவ முன்னேற்றச் சங்கம், யாதவ இளைஞரணிச் சங்கம் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.