வெவ்வேறு சம்பவங்களில் இளைஞா் உள்பட 3 போ் தற்கொலை
விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞா் உள்பட 3 போ் தற்கொலை செய்துகொண்டனா்.
திண்டிவனம் வட்டம், ஊரல், ஒத்தவடை தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் குமாா் (45). கூலித் தொழிலாளி. உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட இவா் கடந்த 6-ஆம் தேதி விஷம் குடித்தாா். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ரோஷனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், அன்னியூா், ஈஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் விபூஷணன் (42). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா் நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டாராம். இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்தாா். இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன் மகன் கோபி (23). பி.காம். பட்டதாரியான இவா் வேலை கிடைக்காததால் மன விரக்தியில் இருந்தாராம். இந்த நிலையில், கோபி வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
