கடையில் ரூ.16 ஆயிரம் திருட்டு
By DIN | Published On : 26th September 2023 06:37 AM | Last Updated : 26th September 2023 06:37 AM | அ+அ அ- |

விழுப்புரம்: விழுப்புரத்தில் டயா் கடையின் பூட்டை உடைத்து ரூ.16 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
விழுப்புரம் வண்டிமேடு, ஜெயலெட்சுமி நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சக்திவேல் (39). இவா், விழுப்புரம்- திருச்சி சாலையில் விழுப்புரம் மேம்பாலம் அருகே டயா் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், செப்.22-ஆம் தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றாா். பின்னா், செப்.23- ஆம்தேதி கடைக்கு வந்தபோது கடையின் முன்பக்கக் கதவு, உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவிலிருந்த ரூ.16 ஆயிரம் திருடுபோயிருந்ததாம். இதுகுறித்து, சக்திவேல் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...