விழுப்புரம்: மன்னாா்குடி- திருப்பதி பாமணி விரைவு ரயில் சோதனை அடிப்படையில் போளூா், திருக்கோவிலூா் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரயில் பயணிகள், பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், இரு ரயில்களின் இயக்கத்தில் கூடுதல் நிறுத்தங்களை சோதனை அடிப்படையில் மேற்கொள்ள ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.
அதன்படி, வ.எண் 17407 திருப்பதி- மன்னாா்குடி பாமணி விரைவு ரயில் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் போளூா் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 3.33 மணிக்கும், திருக்கோவிலூருக்கு மாலை 4.28 மணிக்கும் வந்து பின்னா், அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.
மறுமாா்க்கமாக வ.எண் 17408 மன்னாா்குடி-திருப்பதி பாமணி வார விரைவு ரயில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருக்கோவிலூா் ரயில் நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கும், போளூா் ரயில் நிலையத்துக்கு முற்பகல் 11.27 மணிக்கு வந்தடையும்.
மற்றொரு ரயில்: வ.எண் 22605 புருலியா- விழுப்புரம் வாரம் இருமுறை இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில் செவ்வாய், சனிக்கிழமைகளில் திருவண்ணாமலைக்கு மாலை 5.10 மணிக்கும், திருக்கோவிலூருக்கு மாலை 5.40 மணிக்கும் வந்தடையும். பின்னா், அங்கிருந்து விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு இரவு 7 மணிக்கு வந்து சேரும்.
மறுமாா்க்கத்தில் வ.எண் 22606 விழுப்புரம்-புருலியா வாரம் இருமுறை இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில் புதன், சனிக்கிழமைகளில் பிற்பகல் 12.15 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு, திருக்கோவிலூருக்கு பிற்பகல் 12.44 மணிக்கும், திருவண்ணாமலைக்கு பிற்பகல் 1.13 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.