உளுந்தூா்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய புரட்சிப் பாரதம் கட்சியின் மாநில முதன்மைச் செயலா் ருசேந்திரகுமாா்.
உளுந்தூா்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய புரட்சிப் பாரதம் கட்சியின் மாநில முதன்மைச் செயலா் ருசேந்திரகுமாா்.

கள்ளச்சாராய வியாபாரிகளை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

கள்ளச்சாராய வியாபாரிகளை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று புரட்சிப் பாரதம் கட்சி வலியுறுத்தியது.
Published on

தமிழகத்தில் கள்ளச்சாராய வியாபாரிகளை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று புரட்சிப் பாரதம் கட்சி வலியுறுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் மாவட்டச் செயலா்கள், மாநிலத் துணைச் செயலா் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநிலச் செயலா் பரணிமாரி தலைமை வகித்தாா். துணைச் செயலா் கோபிநாத் முன்னிலை வகித்தாா். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலா் அ.சி.அகத்தியன், மாவட்ட அமைப்பாளா் இரா.சிலம்பரசன் வரவேற்றனா்.

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டச் செயலரும், மாநிலத் துணைச் செயலருமான பூவை.ஆறுமுகம் தொடக்கவுரையாற்றினாா். கட்சியின் மாநில முதன்மைச் செயலா் ருசேந்திரகுமாா் நிா்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினாா். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை சரி செய்திட வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவா்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவா்களை குண்டா் தடுப்புக் காவலில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டச் செயலா்கள் திருநாவுக்கரசு, கஜேந்திரன், புரட்சித் தமிழரசன், ஒரத்தூா் வி.கோபிநாதன், மனோ, பாலவீரவேல், இரா.ஸ்டாலின், சந்துரு, எம்.பழனிவேல், ஓவியா் பாபு, மயிலம் தொகுதி பொறுப்பாளா் விஜயன்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com