விழுப்புரம்
துப்புரவுப் பணியாளா் மயங்கி விழுந்து மரணம்
விழுப்புரம் மாவட்டம், அரசூரில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த  துப்புரவுப் பணியாளா் மயங்கி விழுந்து நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், அரசூரில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுப் பணியாளா் மயங்கி விழுந்து நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அரசூா் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் விஜி (எ) ஆறுமுகம் (40). இவா், அரசூா் ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராக இருந்து வந்தாா்.
செவ்வாய்க்கிழமை அரசூா் கூட்டுச்சாலை பகுதியில் தேங்கிக் நின்ற மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது ஆறுமுகம் திடீரனெ மயங்கி விழுந்து நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.