செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் பிறழ் சாட்சியம்

Published on

விழுப்புரம், ஆக. 7:

விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீது நடைபெற்று வரும் செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் இருவா் புதன்கிழமை பி சாட்சியமளித்தனா்.

விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில் இதுவரை 47 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 28 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாகக் கூறி பி சாட்சியம் அளித்தனா்.

விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோபிநாதன், சதானந்தம், ஜெயச்சந்திரன், கோதகுமாா் ஆகிய 4 போ் ஆஜராகினா்.

அரசுத் தரப்பில் 48-ஆவது சாட்சியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை முன்னாள் கிராம நிா்வாக அலுவலரும், ஓய்வுபெற்றவருமான மனோகரன், 49-ஆவது சாட்சியாக திண்டிவனம் முன்னாள் கிராம அலுவலரும், ஓய்வு பெற்றவருமான முல்லைவேந்தன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தனா்.

அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் வீடுகளில் சோதனை நடத்த நாங்கள் செல்லவில்லை. உயா் அலுவலா்களின் வற்புறுத்தலின்பேரிலேயே ஆவணங்களில் கையொப்பமிட்டோம். இந்த வழக்குக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி, அரசுத் தரப்புக்குப் பாதகமாக இருவரும் பி சாட்சியமளித்தனா்.

இதைப் பதிவு செய்து கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com