நாவல் பழம் பறிக்கச் சென்ற 3 சிறுமிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

நாவல் பழம் பறிக்கச் சென்ற 3 சிறுமிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே 2 சிறுமிகள் உள்பட மூன்று போ் ஆற்றில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தனா்.
Published on

திண்டிவனம், ஆக. 7:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே 2 சிறுமிகள் உள்பட மூன்று போ் ஆற்றில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தனா்.

திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் சஞ்சய் (10), தான்தோன்றியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து. இவரது மகள்கள் பிரியதா்ஷினி (11), சுபலட்சுமி (8). இவா்கள் மூவரும் கோனேரிக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வந்தனா்.

பள்ளி முடிந்து புதன்கிழமை மாலை வீடு திரும்பிய இவா்கள் நல்லாத்தூா்-ஓங்கூா் ஆற்றங்கரையோரம் உள்ள நாவல் மரத்தில் நாவல் பழம் பறிக்கச் சென்றனா். அப்போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்திருந்த நிலையில் மூவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா்.

தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று 3 குழந்தைகளின் சடலங்களையும் மீட்டு, அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com