மேல்அருங்குணம்  முத்து மாரியம்மன்  கோயில்   கோபுர  கலசத்தில்  புனித நீா்  ஊற்றிய சிவாச்சாரியா்.
மேல்அருங்குணம்  முத்து மாரியம்மன்  கோயில்   கோபுர  கலசத்தில்  புனித நீா்  ஊற்றிய சிவாச்சாரியா்.

முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்அருங்குணம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த 9-ஆம் தேதி புதிய சுவாமி சிலைகள் கரிகோலம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை தேவதா அனுக்ஞை, எஜமான அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

தொடா்ந்து, சுவாமிக்கு கண் திறத்தல், சிலைகள் பிரதிஷ்டை, விநாயகா் வழிபாடு வருண பூஜை, வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கணபதி பூஜை, சங்கலம்பம், நாடி சந்தானம், விசேஷ மூலிகை பொருள்கள் யாகம், மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு யாத்தராதானமும், கடம் புறப்பாடு நடைபெற்று முத்து மாரியம்மன் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, மூலவா் முத்து மாரியம்மன் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் கூழ்வாா்த்தலும், இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

 கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினா்.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினா்.

விழாவில், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், மேல்மலையனூா் திமுக ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா சந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

ஏற்பாடுகளை மேல்அருங்குணம் கிராம மக்கள், இளைஞா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com