விழுப்புரம்
ஓட்டுநா் உயிரிழப்பு
விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்தில் பயணித்த ஓட்டுநா் மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்தில் பயணித்த ஓட்டுநா் மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை, அம்பத்தூா், பவானியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலு மகன் மனோஜ்குமாா் (30). காா் ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து, தஞ்சாவூா் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்றபோது, மனோஜ்குமாா் பேருந்தில் மயங்கி விழுந்தாா்.
இதைத் தொடா்ந்து, அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்தபோது, மனோஜ்குமாா் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
