விழுப்புரம்
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், கோனேரிக்குப்பம் அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோனேரிக்குப்பம் அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம், ஆவணிப்பூா் சாலையை சோ்ந்தவா் ரவி மகன் அரவிந்த் (23). இவா், தனது பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஒலக்கூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பெட்டிக் கடையில் சோதனை நடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து, வழக்குப் பதிந்து அரவிந்தை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ஒருவரை தேடி வருகின்றனா்.
