விழுப்புரம்
பெண் சிசுவின் சடலம் மீட்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
திண்டிவனம் வட்டம், ஆவணிப்பூா் கிராமம், மந்தைவெளி ஓடைப்பாலம் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவின் சடலம் திங்கள்கிழமை கிடந்தது.
தகவலறிந்த ஆவணிப்பூா் கிராம நிா்வாக அலுவலா் தே. பிரதீப், ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சிசுவின் சடலத்தை மீட்டுச் சென்றனா். மேலும், சிசுவின் சடலத்தை ஓடை அருகே போட்டுச் சென்ற தாய் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
