ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜன.22 -க்கு ஒத்திவைப்பு

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து,
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை(ஏககாலம்) பெற்ற ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ்தாஸ், விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தனது வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணையை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தொடுக்கப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதுகுறித்த உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 24-ஆம் தேதிக்குள் முடித்து தீர்ப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஜனவரி 22-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினத்தில் ராஜேஷ்தாஸ் தரப்பபு வாதங்களை முன்வைக்க வேண்டும் எனக் கூறி முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com