விழுப்புரம் மாவட்டத்தில் 16.69 லட்சம் வாக்காளர்கள்

விழுப்பும் மாவட்டத்தில் மொத்தம் 16,69,507 வாக்காளர்கள் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 16.69 லட்சம் வாக்காளர்கள்

விழுப்பும் மாவட்டத்தில் மொத்தம் 16,69,507 வாக்காளர்கள் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெளியிட்டார்.
இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 8,24,569 ஆண் வாக்காளர்கள், 8,44,795 பெண் வாக்களர்கள், 213 இதர வாக்காளர்கள் என மொத்தமாக 16, 69,507 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் செஞ்சி தொகுதியில் 2,54,442 வாக்காளர்கள், மயிலம் தொகுதியில் 2,12,788 வாக்காளர்கள், திண்டிவனம் (தனி) தொகுதியில் 2,28,262, வாக்காளர்கள், வானூர் (தனி) தொகுதியில் 2,27,380 வாக்காளர்கள், விழுப்புரம் தொகுதியில் 2,57,600 வாக்காளர்கள், விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,087 வாக்காளர்கள், திருக்கோவிலூர் தொகுதியில் 2,56,019 வாக்காளர்களும் உள்ளனர்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேசுவரி மற்றும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com