ஜூலை 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 19- ஆம் தேதி தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 19- ஆம் தேதி தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் படித்த இளைஞா்களுக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாதந்தோறும் 3-ஆவது வெள்ளிக்கிழமை தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழ் மாதத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) நடைபெறுகிறது.

முகாமில், 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனத்தினா் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்யவுள்ளனா். இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக், செவிலியா், மருந்தாளுநா் படிப்பு முடித்தவா்கள் பங்கேற்கலாம்.

முகாமுக்கு, பொது மற்றுத்திறனாளிகள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதாா்அட்டை மற்றும் சுய விபரக் குறிப்புகளுடன் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com