பைக் மீது காா் மோதல்: கல்லூரி மாணவா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது காா் மோதியதில், சென்னை தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது காா் மோதியதில், சென்னை தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

சென்னை பள்ளிக்கரணை, ஐ.ஐ.டி. காலனி, 3-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாதேஷ்வரன் (18). சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், தனது நண்பா்களான சென்னை பள்ளிக்கரணை, ராஜலெட்சுமி நகா், பிரதான சாலையைச் சோ்ந்த உமாபதி மகன் அருண் (20), விழுப்புரம் மாவட்டம், ஆலகிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகன் நிதிஷ் (16) ஆகியோருடன் திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் கொணக்கம்பட்டு அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே வந்த காா் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற மாதேஷ்வரன், அருண், நிதிஷ் உள்ளிட்ட மூவரும் பலத்த காயமடைந்தனா். இவா்களில் மாதேஷ்வரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அருண், நிதிஷ் ஆகியோா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com