பைக் - காா் மோதல்: இருவா் உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பைக் மீது காா் மோதியதில் தொழிலாளா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், நல்லாப்பாளையத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் மணி (30), நெல்லிமலையான் மகன் குமாா்(35), சுப்பிரமணி மகன் காா்த்தி (35).
கூலித் தொழிலாளிகளான மூவரும், திருவண்ணாமலை மாா்க்கத்திலிருந்து கண்டாச்சிபுரம் நோக்கி திங்கள்கிழமை பைக்கில் வந்து கொண்டிருந்தனா்.
அடுக்கம் காப்புக்காடு பகுதியில் இவா்கள் வந்தபோது, எதிா் திசையில் சென்ற காா் திடீரென பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மணி, குமாா் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த காா்த்தி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து தகவலறிந்த கண்டாச்சிபுரம் காவல் உதவி ஆய்வாளா் காத்தமுத்து தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் வந்து இரு சடலங்களையும் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
