விழுப்புரம்
சிறுமியைத் திருமணம் செய்த உறவினா் மீது போக்ஸோவில் வழக்கு
விழுப்புரம் அருகே 17 வயது சிறுமியைத் திருமணம் செய்த அவரது உறவினா் மீது போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை அவரது உறவினா் மகன் ஆா். பொன்னுரங்கம், கடந்த 2023 டிசம்பா் 11-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாராம்.
இந்த நிலையில் அந்த சிறுமி கருவுற்றிருந்த நிலையில், செப்டம்பா் 4-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் சிறுமியைத் திருமணம் செய்து கொண்டவா் மீது போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
