கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முகையூரில் 100 மி.மீ. மழைப் பதிவு!

முகையூரில் 100 மி.மீ. மழைப் பதிவானது பற்றி...

News image

மழை (கோப்புப்படம்)

DIN

Updated On :5 ஆகஸ்ட் 2025, 4:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக முகையூரில் 100 மி.மி. மழைப் பதிவாகியுள்ளது.

தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லையென்றாலும் புழுக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில் இரவு 8 மணிக்கு மேல் விழுப்புரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இடையில் சிறிது நேரம் மழை விட்ட நிலையில், மீண்டும் இரவு 9.30 மணிக்கும் மேல் பெய்யத் தொடங்கியது. இந்த மழையின் காரணமாக விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி. மீட்டரில்):

முகையூர் -100 மி.மீ., கெடார - 43, விழுப்புரம் - 38, அரசூர் - 37, சூரப்பட்டு - 36, திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், நேமூர் தலா - 35, மரக்காணம் - 30, கோலியனூர் - 29, வல்லம் - 25, மணம்பூண்டி - 23, முண்டியம்பாக்கம் -15.20, திண்டிவனம் - 14.30, வானூர் -13, கஞ்சனூர் -10, செஞ்சி -9.50, அனந்தபுரம் -9, செம்மேடு -7.40, அவலூர்பேட்டை -6, வளத்த - 4 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 554.50 மி.மீ. மழையும், சராசரியாக 26.40 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Summary

திங்கள் இரவு வில்லுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.