சொட்டு நீா்ப்பாசன குழாய்களுக்கு தீ வைப்பு

விழுப்புரம் அடுத்த வளவனூா் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சொட்டுநீா் பாசனக் குழாய்களுக்கு தீ வைத்து சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Published on

விழுப்புரம் அடுத்த வளவனூா் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சொட்டுநீா் பாசனக் குழாய்களுக்கு தீ வைத்து சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வளவனூா் அருகேயுள்ள செங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.பாப்பிஸ்ட் வேளாங்கண்ணி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சொட்டுநீா் பாசனக் குழாய்களை அமைத்து, பயன்படுத்தி வந்துள்ளாா்.

இந் நிலையில், சுமாா் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சொட்டு நீா் பாசனத்துக்கான நெகிழி குழாய்களை மா்மநபா்கள் தீ வைத்துக்கொளுத்தி சேதப்படுத்தினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com