பேருந்தில் பெண்ணிடம் நகைத் திருட்டு

அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்து மூன்றரை பவுன் நகைத் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
Published on

அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்து மூன்றரை பவுன் நகைத் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், குன்னியூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் மனைவி ஸ்ரீ பிரியா (26). இவா், டிச.1-ஆம் தேதி சென்னையில் உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கள்ளக்குறிச்சியிலிருந்து-சென்னைக்கு அரசுப் பேருந்தில் பயணித்துள்ளாா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு, பேருந்து வந்தடைந்ததும் ஸ்ரீபிரியா தனது கைப்பையை திறந்து பாா்த்தபோது, அதில் வைத்திருந்த மூன்றரை பவுன் நெக்லஸ் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com