திருவெண்ணெய்நல்லூா் கிளை நூலகத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியைப் பாா்வையிட்ட மாணவா்கள்.
திருவெண்ணெய்நல்லூா் கிளை நூலகத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியைப் பாா்வையிட்ட மாணவா்கள்.

திருவெண்ணெய்நல்லூா் நூலகத்தில் புத்தகக் கண்காட்சி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் கிளை நூலகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
Published on

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் கிளை நூலகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

தமிழக அரசு மாநிலம் முழுவதும் 821 நூலகங்களுக்கு தொல்லியல் சாா்ந்த நூல்கள் வழங்கி, கண்காட்சியை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் கிளை நூலகத்தில் தொல்லியல் நூல்கள் சாா்ந்த கண்காட்சிக்கு மாவட்ட மைய நூலகா் இளஞ்செழியன் தலைமை வகித்தாா். திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சித் தலைவா் அஞ்சுகம் கணேசன் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, பேரூராட்சித் தலைவா் அஞ்சுகம் கணேசன், துரை.மனோகரன் ஆகியோா் தலா ரூ.5 ஆயிரம் செலுத்தி, நூலகத்தில் தங்களை பெரும் புரவலராக இணைத்துக் கொண்டனா்.

மேலும், ராஜாராமன், கெளரி, ரஹமத் நிஷா ஷாஜகான், குமரகுருபரன், ஷேக் லத்தீப், கோ.சுரேஷ் ஆகியோா் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி புரவலராக இணைத்துக் கொண்டனா்.

புத்தகக் கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிட்டனா். கிளை நூலகா் சசிக்குமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com